இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்துக்குப் பதிலாக, வாளேட்டிய பண்டா கரடியுடன் கூடிய வாழ்த்து அட்டையை வைத்திருந்த ஜப்பானியர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை அஞ்சலகத்தில் இந்த நத்தார் வாழ்த்து அட்டைகளை அனுப்பச் சென்ற போதே ஜப்பானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் ஒன்றை அடுத்து கல்கிசை அஞ்சலகத்துக்குச் சென்ற புலனாய்வுத்துறையினர், 44 வாழ்த்து அட்டைகளுடன் ஜப்பானியரைக் கைதுசெய்தனர்.
கடந்த 7ம் திகதி இலங்கைக்கு வந்த இந்த ஜப்பானியர் கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
இவர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட புலனாய்வு அதிகாரிகள் ஜப்பானில் அச்சிடப்பட்ட இதுபோன்ற மேலும் 120 வாழ்த்து அட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

.gif)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக