உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளில் ஈடுபட்ட காரணத்தினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்த போதிலும், மாவீரர் தின நிகழ்வுகளில் ஈடுபட்டமைக்காகவே மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான அடிப்படை உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் அதனை பயங்கரவாதமாக கருதக் கூடாது .
அத்துடன் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படவில்லை இவ்வாறான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்கள் முற்று முழுதாக சட்டத்திற்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக