யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும்
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் தீவுப்பகுதி செயற்பாட்டாளருமான நிசாந்தன் மீது
சற்று முன் கைக்குண்டுத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கோவிலுக்குச் சென்று விட்டு
வீட்டினுள் நின்ற போது தொலைபேசி அழைப்பு வரவே வெளியில் நின்று
கதைத்ததாகவும் அப்போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டை
விசியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போது வீசப்பட்ட கைக்குண்டு மரத்தில்
பட்டு திசை மாறி விழுந்ததால் தான் காயம் ஏதும் இன்றித் தப்பியுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாணப் பொலிசாரிடம் முறையிடச் சென்றவண்ணம்
உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக