நாடு முழுவதிலுமுள்ள போலி வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் துரித
நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸமா அதிபரை வலியுறுத்தியுள்ளதாக அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
போலி வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் அரச
வைத்திய அதிகாரிகள் சங்கம் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதன் பின்னதாக விசேட பொலிஸ் குழு ஒன்றை அமைத்து போலி வைத்தியர்கள்
குறித்து கவனம் செலுத்த இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாக அரச
வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் நவீன் த சொய்சா தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 40,000 போலி வைத்தியர்கள் உள்ளதா தமது சங்கத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக