சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

2 ஜனவரி, 2013

அரசியல் தீர்வு காண சர்வதேச தலையீடு தேவை; தமிழ் தேசியக் கூட்டமைப்பு

news சர்வதேச சமூகத்தால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முடியும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் சர்வதேசத்தினால் மட்டுமே முடியுமான காரியம் அதனால் அவர்கள் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து விரைவில் தீர்வில் தீர்வினை பெற்றத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வை ஏற்படுத்த உருவாக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுமா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதற்கு முனைப்புக் காட்டாத தன்மையினை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றது. எனவே சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தினை நீக்குவது என்றும் 18 ஆவது திருத்தத்தையோ அல்லது திவிநெகும  வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தை கொண்டுவந்திருக்காது.

இதேவேளை நாட்டில் உள்ள பிரதம நீதியரசருக்கே இவ்வாறு நடந்துள்ளது என்றால் அரசியல் தீர்வு எவ்வாறான நிலையில் உள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக