கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் இந்த சிறுவர் இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கே.பி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலைப்புலிகளினால் 1993ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து
வைக்கப்பட்டு 2009ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ்
பராமரிக்கப்பட்டு வந்தது.
யுத்தத்திற்குப் பின்னர் இச்சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளைகள் பாரிய
நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த நிலையில் மீண்டும் கிளிநொச்சி பகுதியில்
இந்த சிறுவர் இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக