சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 ஜூலை, 2013

வீதியால் சென்ற ஒன்பது வயது சிறுமியை வல்லுறவுக் குட்படுத்திய 57 வயது நபருக்கு வலைவீச்சு

 
அம்பாறை, திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் வீதியால் சென்ற ஒன்பது வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை மாலை பலவந்தமாக கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி விட்டு தலைமறைவாகியுள்ள 57 வயதுடைய ஒருவரை பொலிஸார் தேடி வருவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விநாயகபுரம் 4ஆம் பிரிவு மத்திய வீதியைச் சேர்ந்த இச்சிறுமி சம்பவனதினம் வீட்டில் இருந்து மாலை 5 மணியளவில் அவருடைய பெரியம்மா வீட்டுக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மாணிக்கப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 57 வயதுடையவர்,
சிறுமியை பாழடைந்த வீடொன்றிற்கு பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி விட்டு சிறுமியிடம் 100 ரூபா பணத்தை வழங்கி இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி அழுது கொண்டு வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தாயாரிடம் கூறினார். இதனையடுத்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக