சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 நவம்பர், 2013

பிரித்தானிய பிரதமருக்கு முன்னிலையில் இலங்கைப் பொலிஸாரின் அடாவடி!

சிறிலங்கா சென்றுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இன்று பிற்பகல் சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானத்தில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 உள்ளிட்ட 30 வரையிலான பிரித்தானிய செய்தியாளர்கள், பலாலிக்குச் சென்றனர்.
அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானியப் பிரதமர், யாழ்.பொது நூலகத்தில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதேவேளை, நீண்டதொரு இடைவெளியின் பின்னர் காணாமல் போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டம் யாழ் நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரித்தானிய பிரதமரை சந்திக்காத வகையில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதகுருமார் என பாகுபாடேதுமின்றி பொலிஸார் தாக்குதல் நடத்தியமையால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக