சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 டிசம்பர், 2013

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகளுக்கு மகிந்த ராஜபக்‌ஷ சார்பாக பணம் கொடுத்தது யார்?

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது 784 மில்லியன் ரூபாவை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் யார் எடுத்துச் சென்றது என்பதை மௌபிம ஊடக நிறுவனத்தார் வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பணம் எவ்வாறு, யாரால் எடுத்துச் செல்லப்பட்டது என்பதை மௌபிம தரப்பினரால் வெளியிட முடியாவிட்டால் அதனை எதிர்காலத்தில் தாங்கள் வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று  நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 55 வது வருடந்த தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்நாள் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சார்பான தீர்மானத்தை விடுதலைப் புலிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தனர் என்ற கருத்து ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

இந்தப் பணத்தை தற்போதைய மௌபிம நிறுவன உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ் ஊடாகவே பரிமாறப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை மையப்படுத்தியே விஜயதாஸ ராஜபக்‌ஷ மேற்படி சவாலை முன்வைத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிக்காததன் காரணத்தினாலேயே அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக