பிரித்தானியா எதிர் கட்சி
தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர் கடந்த
வெள்ளி கிழமை சந்தித்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா வில் நடைபெற
இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த
பொதுநலவாய மகாநாடு (CHOGM) தொடர்பாகவும், தொடர்ச்சியாக இலங்கை அரசினால்
தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பாகவும் இந்த
சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த
சந்திப்பில் எட் மிலபான்ட் கூறுகையில், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட
போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரனைக்கு மார்ச் மாதம் வரை உலக நாடுகள்
பொறுமை காக்க கூடாது எனவும், போர் குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதியின்
தலைமையில் CHOGM மகாநாடு நடைபெற்றது மிகவும் கவலைக்குரியது என்றும் தனது
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும்,
இலங்கையில் தமிழ் மக்கள் மீது தடத்தப்பட்ட போர்குற்றத்திற்கு சர்வதேச
விசாரணை வரும் வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும்
கூறினார். சம காலத்தில் பிரித்தானியா பேரவையின் உறுப்பினர்கள் ரோதார்ஹம்
தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாரா செம்பியன் (Saara Champian)
அவர்களையும் சந்தித்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால்
மேற்கொள்ளப்படும் இனபடுகொலை பற்றி கலந்துரையாடினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக