ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே சாட்சியமளித்தார். இலங்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த தீர்ப்பாயத்தின் வழக்கு விசாரணைகளை நடத்தினர். இங்கு
சாட்சியமளித்த மக்ரே மூன்று இலங்கையர்கள் தமக்கு இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கியதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் கெலும் மக்ரே வன்னிப் போரை நேரில் பார்த்தவர் போல் சாட்சியமளித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அவருக்கு வழங்கிய தகவல்களை கொண்டே அவர் இந்த சாட்சியங்களை வழங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலிகள் வெளியிட்டு வந்த தேதுன்ன (வானவில்) என்ற சிங்கள பத்திரிகையை வெளியிட்ட ரோஹித்த பாஷண அவேர்தனவும் சாட்சியமளித்துள்ளதாக திவயின கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக