மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாந்தோட்டம்
அலியார் வட்டைப் பகுதியில் நேற்று மோட்டார் ரக குண்டு தவறுதலாக வெடித்ததில்
இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஏரம்பு அருண்குமார் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஏரம்பு அருண்குமார் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞனர், தனது வீட்டு வளாகத்தை சுந்தம் செய்து கொண்டிருக்கையில் இக் குண்டை கண்டேடுத்ததாகவும் பின்னர் பாழடைந்த அயல் வளாகத்தில் வீசிய போது அக் குண்டு திடீர் என்று வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற வெல்லாவெளிப் பொலிசார் மற்றும்
வெல்லாவெளி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் தொடந்து
விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக