தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கூறிய பிரதமர்
தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
பள்ளி மாணவி ஒருவர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
11
வயது பள்ளி மாணவியும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும் ஆன ஊர்வசி
ஷர்மா, பிரதமர் மன் மோகன் சிங்குக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கூறிய
கருத்திற்கு தகுந்த ஆதார கோப்புகளை அளிக்க வேண்டும் அல்லது கருத்துக்கு
மன்னிப்பு கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்
இந்த தகவலை அறிக்கை பெறப்பட்ட தேதியிலிருந்து 60 நாடகளுக்குள் பதில்
அளிக்காவிட்டால், பிரதமர் என்ற அந்த பதவியின் கலாச்சாரத்தை மீறி தகவல்
பெறும் உரிமை பயனாளிகளின் உணர்வுகளுக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக சட்ட
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக