சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2012

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை!

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தெரிவித்தார். இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக