சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 டிசம்பர், 2012

போராட்டங்களை முன்னெடுப்போரை கைது செய்வேன்: கோத்தா மிரட்டல்




தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்பெற இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அமைப்பை வடக்கில் மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் சில தமிழ் அரசியல்வாதிகளும் குழுக்களும் செயற்படுகின்றன. இருப்பினும் அவர்களது எண்ணம் ஒருபோது நிறைவேறப் போவதில்லை.
மேலும், வடக்கிலுள்ள இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணும் வகையில் சில செயற்றிட்டங்கள் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பான தகவல்கள் தற்போது புலனாய்வுப் பிரவினருக்குக் கிடைத்துள்ளன.
அத்துடன் போராட்டங்களை முன்னெடுப்போரைக் கைது செய்து புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பவும் தான் ஒருபோதும் பின்னிற்கமாட்டேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக