கனகராயன்குளம்,
புளியங்குளம் பகுதிகளில் இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் நிரந்தர முகாம்
அமைக்க வவுனியா மாவட்ட காணி வழங்கல் அபிவிருத்திக் குழு காணி வழங்குவதற்கு
அனுமதியளித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட
செயலகத்தில் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நடைபெற்ற மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புளியங்குளத்தில் பொலிஸாருக்கு 5 ஏக்கர்
காணியும்27ஆவது படைப் பிரிவுக்கு 5 ஏக்கர் காணியும் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன் குளத்தில் பொலிஸ் நிலையத்துக்கு 2
ஏக்கர் காணியும் 56 ஆவது படைப்பிரிவுக்கு 7 ஏக்கர் காணியும்
ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் புளியங்குளத்தில் அரை ஏக்கர்
காணி சுகாதார திணைக்களத்துக்கும் கற்குளம் சந்தியில் அரை ஏக்கர் காணி
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், நயினா மடுப் பகுதியில் ஒரு ஏக்கர் காணி
மிருக வைத்திய நிலையத்துக்கும், புளியங்குளம் ஏ9 வீதியில் 11 ஏக்கர் காணி
பாடசாலை அமைப்பதற்கும், நயினாமடுவில் 5 ஏக்கர் காணி ஆயுள்வேத
வைத்தியசாலைக்கும், முத்துமாரி நகர்பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணி கலாசார
நிலையத்துக்கும், நெடுங்கேணியில் கால் ஏக்கர் காணி பிரதேச
வைத்தியசாலைக்கும், மன்னங்குளம் கொல்லாறு பகுதியில் 20 பேர்ச் காணி பல
நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கும், பரசங்குளத்தில் 35 ஏக்கர் காணி
இந்திய வீட்டுத் திட்டத்துக்கும், முதலியார் குளத்தில் 15 ஏக்கர், கற்குளம்
பகுதியில் 42 ஏக்கர், தாண்டிக்குளத்தில் 120 ஏக்கர் காணிகள்
நெற்செய்கைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட காணி
வழங்கல் திட்டமிடல் குழு செயலர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலர், திணைக்களத்
தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக