வன்னியில் நடைபெற்ற இறுதிப்
போரில், இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத கொடூரமான இரசாயன
ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. ஆனால், இலங்கை அரசு
இறுதிப்போர் குறித்த எந்தப் புள்ளிவிவரங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக
இல்லை.
இதனால், குறைந்த பட்ச உண்மைகளைக்கூட
ஏற்க மறுப்பதால் இலங்கையின் வாக்குறுதியை சர்வதேச சமூகம்
நம்பமறுக்கிறது. என்று பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ்
ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த நான்காம் கட்டபோர் குறித்து "Still Counting the Dead
என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம், "ஈழம்:
சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்' என்ற தலைப்பில் சென்னையில்
வெளியிடப்பட்டது
.
இந்த நிகழ்வில் நூலாசிரியர் பிரான்செஸ் ஹாரிசன் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு
இலங்கையில் போர் முடிந்து நான்கு
ஆண்டுகளாகின்றன. ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம்
அடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற
விவரங்கள் வெளியாகவே இல்லை.
போர் இறப்பு குறித்து, ஐ.நா. வெளியிட்ட
முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்தவாரம்
வெளியான ஐ.நாவின் இன்னொரு அறிக்கையில், 70 ஆயிரம் பேர் பேர் கொல்லப்பட்டனர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி
2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் வன்னியில் காணாமல்
போயுள்ளனர். இதுவரை இவர்களுக்கு என்னவா யிற்று என்றும் தெரியவில்லை.
இந்த உயிரிழப்புக்களும், மனித
பாதிப்புக்களும் 35 சதுர கி.மீ பரப்பளவில் 130 நாள்களில் நடந்துள்ளன.
பாதுகாப்பு வலயத்தில் வைத்து ஆட்லறிகள், மோட்டார்கள், ரொக்கட் லோஞ்சர்கள்,
கிபிர் விமானங்களைப் பயன்படுத்தியே இலங்கைப் படையினரால் இவர்கள் படு கொலை
செய்யப்பட்டார்கள்.
இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான இரசாயன ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசு, எந்தப்
புள்ளிவிவரங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய இலங்கையைக்
கட்டியெழுப்புவோம் என்று கூறும் இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக் கூட
ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம் என்ற வாக்குறுதியை
அனைத் துலக சமூகம் நம்ப மறுக்கிறது.
போரில் பாதிக்கப்பட்ட பலரை நான்
சந்தித்தேன். சிலரது விவரங்களையும், செவ்விகளையும் மட்டுமே, நூலில்
குறிப்பிட்டுள்ளேன். தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் புலிகள். ஆனால்,
அவர்களே, போரில் நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.
போரின் விளைவுகளை பகிரங்கமாக ஏற்றுக்
கொண்டு புனரமைப்புப் பணிகளைச் செய்ய இலங்கை அரசு முன்வந்தால்தான் அமைதியான
சமூகத்தை அந்த நாட்டில் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
வன்னியில் காயத்துக்கு மருந்திடத்
தாமதித்ததால் உயிரிழந்த ஒரு மதகுரு வின் நிலை, தனது குழந்தைக்குப்
பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயாரின் மரணத்தின் இறுதி நிமிடங்கள்
என்பவற்றையும் இந்த நிகழ்வில் பிரான்செஸ் ஹாரிசன் விவ ரித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக