இலங்கை அரசாங்கம் தற்போது பிரதம நீதியரசருக்கு எதிராக மேற்கொண்டுள்ள குற்றவியல்
பிரேரணை நடைமுறைகள் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய
உறுதிமொழிகளுக்கு எதிரானவை என்று லக்பிம செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக
குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அதனை நீதித்துறையே ஆராயலாம் என்ற
உறுதிமொழியை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு
வழங்கியிருந்தது.
எனினும் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள இலங்கையின்
நாடாளுமன்றத்துக்கு நீதித்துறையோ அல்லது வெளிநிறுவனங்களோ உத்தரவிடமுடியாது
என்று அண்மையில் அறிவித்திருந்தார். இந்தநிலையில் குறித்த செயற்பாடு ஐக்கிய
நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு எதிரானது என்று லக்பிம
குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே பிரதம நீதியரசர் நாடாளுமன்ற தெரிவுக்குழு தமக்கு
எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையை ஆட்சேபித்து, தாக்கல் செய்துள்ள மனு
தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சபாநாயகர் உட்பட்ட நாடாளுமன்ற
தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளமையையும் லக்பிம
சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக