சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 டிசம்பர், 2012

நோர்வே தூதர் யாழ். விஜயம்


news
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரீட் லோசென் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி .ஏ சந்திரசிறி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அத்துடன் நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஆண்டு யாழ். மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தூதர் அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக