மனித உரிமை மீறல் சம்பவங்கள் 2009 ஆம் ஆண்டு மட்டுமல்லாது இன்றும் இலங்கையில் தொடர்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான
இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற கொலைகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை
ஒன்றை இலங்கை அரசு எதிர் கொண்டே ஆகவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்
சபை வலி யுறுத்தியுள்ளது.
"கொலைகளுக்குப் பொறுப் பான குற்றவாளிகளை
முழுமையான, சர்வதேச, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்கொண்டு வரவேண்டும் என்று
கோருகின் றோம்'' என்றார் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர்
சலில் ஷெட்டி. இவர் ஒரு இந்தியர்.
2008, 09 மனித உரிமை மீறல்கள் தொடர்பாக
இலங்கை அரசு மேற்கொண்ட விசாரணைகள் போதாது என்று அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள்
மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழீழ
விடுதலைப் புலிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை கொலை செய்ததாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
"மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் 2009
ஆம் ஆண்டு மட்டுமல்லாது இன்றும் இலங்கையில் தொடர்கின்றன'' என்றார் அவர்.
மனித உரிமை மீறல்கள் என்பது இப்போதும் தொடரும் பிரச்சினை என்றார் அவர்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள முதலாவது இந்தியர் ஷெட்டி.
இலங்கையின் நிலை தொடர்பில் இந்தியா
பெரும்பாலும் அமைதிகாப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். "இந்தியா புதிய
கோணத்தில் இப்பிரச்சினையை அணுகும் நேரம் வந்துவிட்டது'' என்றார் அவர்.
போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.
|
|
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
23 டிசம்பர், 2012
சர்வதேச விசாரணையை இலங்கை எதிர்கொண்டேதான் ஆக வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக