சிறிலங்கா இராணுவத்தினரின்
புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படுவோர் தொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம், வழிகாட்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில், சிறிலங்காவைச் சேர்ந்த
ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர், எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஒருபாலுறவுச் சேர்க்கையாளர்கள்
போன்றோர், அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படக் கூடியவர்களாகப்
பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தினரின்
விண்ணப்பங்களை மிக கவனமாக ஆராய வேண்டும் என்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர்
ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் மூன்று
பத்தாண்டுகளாகத் தொடர்ந்த ஆயுதமோதலின் போது, இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள்
மற்றும் அனைத்துலக மனித உரிமைச்சட்ட மீறல்களும், போருக்குப் பிந்திய மோசமான
மனிதஉரிமை மீறல்களும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த
ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
‘சிறிலங்காவில் இருந்து புகலிடம்
கோருபவர்களின் அனைத்துலகப் பாதுகாப்பு தேவைகளை மதிப்பிடுவதற்கான
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் தகுதி வழிகாட்டி -2012‘ என்ற
அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள்
குறித்து முடிவெடுப்போர் மற்றும் அரசுகளுக்கு உதவும் நோக்கிலேயே இந்த
வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஈபிடிபி, புளொட் மற்றும்
சிறிலங்கா அரச ஆதரவு மற்றும் எதிர்த்தரப்பு துணை ஆயுதக்குழுக்கள்
என்பனவற்றின் முன்னாள் உறுப்பினர்களின் விண்ணப்பங்களையும் கவனமாக
பரிசீலிக்கும்படியும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
|
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
23 டிசம்பர், 2012
புகலிடம் கோரும் சிறிலங்கா இராணுவம் குறித்து ஐ.நா எச்சரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
+(1).jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக