சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 டிசம்பர், 2012

மாணவர்களை விடுதலை செய்! வவுனியாவில் மக்கள் திரண்டு குரல்


news

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் அரசால் நடத்தப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும்  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரில் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணிவரா ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்தேசியக் கூட்மைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பு சார்பாக மாவை சேனாதிராசா,சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்கி ஆனந்தன்,ஆகியோரும்,தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார்,கஜேந்திரன் ஆகியோரும்,புளொட் சித்தார்த்தன்,தமிழர் விடுதலைக்  கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி,ஜனநாயக மக்கள்முன்னணியின் பாஸ்கரா,புதிய மாக்ஸிச லெனினிய கட்சியின் செந்தி வேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தில், “கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்”,“நிலத்தை ஆக்கிரமிக்காதே”, “மத முரண்பாட்டை தோற்றுவிக்காதே” என்று அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு பெரும் திரளான மக்களும் கலந்துகொண்டனர்.
 
1.கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்.
2. வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்தவேண்டும். 
3.பல்கலைக்கழகங்களுக்குள் நிலவும் கலாசார மற்றும் கல்வி சீரழிப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும். 
4.காரணமற்ற கைதுகளை உடன்  நிறுத்த வேண்டும். 
5.அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரைக் கண்டறிதல், 
6.மாணவர்களை சிறையிலடைப்பதை நிறுத்தல். 
7.காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், 
8.மீள்குடியேறிய மக்களை சுதந்திரமாக செயற்பட விடுதல் ஆகிய எட்டு கோரிக்ககைள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக