யுத்தத்தின் பின்னர் தமது
வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக துன்பங்களை அனுபவித்து வருகின்ற
வடக்குத் தமிழ்ப் பெண்களிடம் 35 ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாகக் கூறி
ஆசைகாட்டி அவர்களை இராணுவத்தில் சேர்த்து அரசு, துன்புறுத்துகின்றது என
நவசம சமாஜக் கட்சித் தெரிவித்தது.
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிலர் துன்புறுத்தப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் இந்த நடவடிக்கையைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் எனறும் அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட பெண்களுள் சிலர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏன் இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்? இவர்களுக்கு என்ன நடந்தது?
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களைப் பார்ப்பதற்கு, அவர்களது பெற்றோருக்கும், இராணுவத்தினர் அனுமதி கொடுக்கவில்லை. 35 ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாகக் கூறி இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக