சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 ஜனவரி, 2013

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறக்க வருகிறார் ஜனாதிபதி; 15 இல் திறப்பு விழா

 news ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி புதிய கட்டடத்தை திறப்பு விழாவிற்கான அதிதியாக கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய கட்டம் ஆனது ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. அத்துடன் இந்த புதிய கட்டடத் தொகுதியில் கதிர் இயக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் என்பன இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக