சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜனவரி, 2013

பரிஸ் நகரில் 3 குர்தீஷ் பெண்கள் சுட்டுக்கொலை

பரிஸ் நகரில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான 3 குர்தீஷ் பெண்கள் சுட்டுக்கொலை
============
பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள கார் டு நோர்ட் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள குர்தீஷ் கல்வி வளாகம் ஒன்றில் இன்று காலை 3 குர்தீஷ் இனப் பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்துபோன 3 பெண்களில் ஒருவரான 32 வயதான பிடன் டோகன் அக்கல்வி நிறுவனத்தின் தகவல் பிரிவில் பணிபுரிகிறார். மற்றொரு பெண்ணான சாகின் கான்சிஸ், குர்தீஷ் இயக்கமான (PKK) தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். மூன்றாவது பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவத்தை உறுதி செய்ததுடன், இதுகுறித்து விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட இப் பெண்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தங்களது தீவிரமான ஆதரவை வழங்கி வந்தவர்கள். தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்று, தமது ஆதரவுக் குரல்களையும் பதிவு செய்தவர்கள். இந்நிலையில் இவர்களது இழப்பு பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த நவம்பர் 8ம் திகதி தலைநகர் பரிசில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரிதி அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோன்றே, இவர்களும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பெண்களுக்கு தலையிலேயே ஒவ்வொரு குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

http://kurdistantribune.com/2013/kurdish-women-activists-assassinated-paris/

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35927

பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள லாச்சப்பல் (lachpal) பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள கார் டு நோர்ட் (Gard de nord)தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள குர்தீஷ் கல்வி வளாகம் ஒன்றில் இன்று காலை 3 குர்தீஷ் இனப் பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்துபோன 3 பெண்களில் ஒருவரான 32 வயதான பிடன் டோகன் அக்கல்வி நிறுவனத்தின் தகவல் பிரிவில் பணிபுரிகிறார். மற்றொரு பெண்ணான சாகின் கான்சிஸ், குர்தீஷ் இயக்கமான (PKK) தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். மூன்றாவது பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவத்தை உறுதி செய்ததுடன், இதுகுறித்து விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 http://kurdistantribune.com/2013/kurdish-women-activists-assassinated-paris/
http://kurdistantribune.com/2013/kurdish-women-activists-assassinated-paris/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக