சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

8 ஜனவரி, 2013

காவிரி உரிமையை மீட்க சென்னையில் போராட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி, டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் தொடரும் நிலையில், சென்னையிலும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தற்போது உண்ணாவிரதம் நடந்து வருகிறது. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக