இந்த இணையதளத்தில் 50 G.B. வரை இலவசமாக கோப்புகளைச் சேமிக்கும் வசதி
வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆன்லைனில் கோப்புகளைச் சேமிக்கும் சேவைகளை
வழங்கிவரும் கூகுள் டிரைவில் 5 ஜி.பி.யும், DropBox-ல் 2 ஜி.பி.யும்,
மைக்ரோசாப்டின் ஸ்கைடிரைவில் 7 ஜி.பி.யும் மட்டுமே இலவசமாக கோப்புகளைச்
சேமிக்க முடியும்.
இணையத்தில் சேமிக்கப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கான ரகசியக்
குறியீடுகள், பயனர்களிடமே இருக்கும் என்பதால், அந்தக் கோப்புகளின்
உள்ளடக்கத்தை மெகா நிறுவனம் பார்க்க முடியாது என்பது Mega இணையதள சேவையின்
சிறப்பம்சமாகும்.
பதிப்புரிமை பெற்ற கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து
கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இதற்கு முன் இயங்கி வந்த மெகா
அப்லோட் இணையதளத்தை அமெரிக்கா முடக்கியது.
நியூஸிலாந்தில் இருந்த கிம் டாட்காம் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். இந்த சட்டச் சிக்கலை மீண்டும் சந்திக்கக்கூடாது
என்பதற்காக புதிய இணையதளத்தில் பதிவேற்றப்படும் கோப்புகள் தொடர்பான
பொறுப்பை பயனர்களிடமே விட்டுவிட கிம் டாட்காம் முடிவு செய்துள்ளார்.
அது
மட்டுமல்லாமல், Cloud முறையில் இயங்கும் சர்வர்களில் மெகா இணையதளம்
செயல்படுவதால், அதை முடக்குவது கடினம் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக