ஈரோடு
மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கோட்டைக்காட்டு புதூர் கிராமத்தை சேர்ந்தவர்
நல்லசிவம். இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார்
பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த
நிலையில் நேற்று காலை நந்தினி சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் உடல்
கருகிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில்
நகக்கீறல்கள் இருந்தன.
எனவே
கற்பழிப்பு முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என கூறப்பட்டது. கொலையாளிகள்
அவரை கொன்று விட்டு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து விட்டனர். இந்த கொலை
தொடர்பாக சிவகிரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத
பரிசோதனைக்காக மாணவி நந்தினியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
வரப்பட்டது. அங்கு இன்று காலை பிரேத பரிசோதனை நடந்தது.
பரிசோதனை
முடிந்ததும் மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க முன் வந்தனர். ஆனால்
உறவினர்களும், மாணவ - மாணவிகளும் நந்தினியின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
நந்தினி
கொலைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். குற்றவாளிகளை உடனே னைது செய்ய
வேண்டும் என்று வலியுறுத்தினர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள்
மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும்
ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக