சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 ஜனவரி, 2013

பசு மாட்டிற்கு வளைகாப்பு. தமிழகத்தில் நடக்க உள்ள ஒரு வினோத விழா


சு மாட்டிற்கு வளைகாப்பு.  தமிழகத்தில் நடக்க உள்ள ஒரு வினோதமான விழா. 

தன்னுடைய பசு மாட்டின் மீது அளவு கடந்த அன்பின் மிகுதியால் இப்படி வினோதமான செயலை செய்வது வேடிக்கையானது. அதாவது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு எனும் ஊரில் சன்னாசி என்பவர் தன் வீட்டில் உள்ள பசுமாட்டிற்கு வளைகாப்பு விழா என்று ஏற்பாடு செய்து தன் வீட்டு மாட்டின்  படத்தை படம் எடுத்து வண்ணப் பத்திரிக்கை அடித்து வீட்டில் பந்தல் அமைத்து ஊரில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில்  உள்ள பல கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து விழா கொண்டாட உள்ளார். அதுவும் மாட்டுக்கு வளைகாப்பு விழா என்று பத்திரிக்கை கொடுத்து. இந்த வேடிக்கையை  எங்கு போய் சொல்வது ! நீங்களும் வாழ்த்துச் சொல்லுங்க. மனிதருக்கே வளைகாப்பு செய்ய வசதி இல்லாத நிலையில் இவர் மாட்டிற்கு வளைகாப்பு செய்ய இருக்கிறார் . 

அது சரி , தனக்கு வளைகாப்பு நடக்க இருப்பது அந்த மாட்டிற்கு தெரியுமா ?  

நன்றி : சிகா தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக