சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 ஜனவரி, 2013

அநுராதபுரத்தில் பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்றக்கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம்

 
 
 
 
அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் 300 பேர் வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அப்பிரதேசம் புனித பிரதேசம் என்று கூறியே பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. போலீஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வந்த அப்பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றக்கோரும் இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக