விடுதலைப் புலிகளோடு
முதல் கட்ட போர் ஆரம்பித்தவேளை, இலங்கை இராணுவத்தில் சுமார் 1லட்சத்தி
90,000 ஆயிரம் பேர் இருந்தார்கள். இருப்பினும் பின்னர் கோட்டபாயவின்
அறிவுறுத்தலுக்கு அமைவாக மேலும் 1 லட்சம் இளைஞர்களை இலங்கை அரசு தமது
படையின் இணைத்தது. மேலும் 10,000 பேரை கடற்படையிலும் வான் படையிலும்
இணைத்தது இலங்கை அரசு. ஒரு காலகட்டத்தில் முப்படைகளையும் சேர்த்து சுமார் 3
லட்சம் படையினர் இலங்கையில் இருந்தார்கள்.
2009 ம் ஆண்டு போர் முடிவுக்கு
வந்தபின்னர், இராணுவத்தில் இருந்து பல இளைஞர்கள் வெளியேறி இத்தாலி,
அவுஸ்திரேலியா, மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பை
தேடிச் சென்றுவிட்டனர். 2010ம் ஆண்டில் சுமார் 20,000 ஆயிரம் பேர்
இராணுவத்தை விட்டு விலகியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் 2011ல் 27,000 பேர்
விலகியுள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்கையில், போன வருடம் மாத்திரம் சுமார் 71,000 இளைஞர்கள்
படையில் இருந்து விலகியுள்ளார்கள். இதில் 30,000 பேர், முறையாக
விலகியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோல 2010 மற்றும் 2011ல்
சொல்லாமல் ஓடித் தப்பிய இராணுவம் எவ்வளவு என்ற விடையம் இதுவரை
அறிவிக்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களையும் கூட்டிப் பார்த்தால், ஆக
மொத்தத்தில், ஒரு லட்சத்தி 18,000 ஆயிரம் பேர் இதுவரை விலகியுள்ளார்கள்
என்பது உத்தியோகபூர்வ அறிக்கையாகும். அப்படி என்றால் இராணுவத்தில் இருந்து
சொல்லாமல் ஓடித் தப்பியவர்களையும் சேர்த்து கூட்டினால், இலங்கை
இராணுவத்தின் பலம் சரியாக அரைவாசி குறைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக