உலகெங்கும் பரந்து வாழும் எனது தமிழ் உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த
பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தைப்பொங்கல் விழாவை; தமிழ் இந்து
மக்கள் மாத்திரமல்ல அண்மைக் காலங்களில தமிழ் கிறீஸ்தவர்களும் தமக்குரிய
நன்றி வழிபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் நெருங்கிய காலங்களில்
விசேடமாக தாயக தாகத்துடன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள; மத்தியில்
இது தமிழ் மரபு விழாவாக கொண்டாடப் படுகிறது.
|
இது தாயக தாகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் புலத்தில் வாழும் எமது
ஈழத் தமிழருக்கு மிகவும் கருத்தும் பொருத்தமும் உந்து சக்தியும் அளிக்கும்
விழாவாக இம் மரபு நாளை வரவேற்கிறோம். இறைவன் எம்மை மனிதராக படைத்த பொழுது
எமக்கென்று மொழி, நிறம், கலை, கலாச்சாரம், தாயகம், திறமைகள், பழக்க
வழக்கங்கள் என்று போதியளவு கொடைகளை இனாமாகக் கொடுத்திருக்கிறார். இவைகளை
எமது மூதாதையர்கள் பெருமையுடன் காத்து வழர்த்தனர். ஓவ்வொரு தலை முறையும்
அப் பணியை செய்து வருகின்றனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் தமக்குரிய
நவீன வசதிகளுடன் இப் பணியை நன்றாக செய்கின்றனர்.
இவைகள் உண்மையாயிருந்தும் எமக்குள் பலர் எமது மரபுக் கொடைகளை மறந்து மற்றைய இனங்கள், மொழிகள், கலை கலாச்சாரங்களிலும் பார்க்க ஏதோ நாம் குறைந்தவர்கள் என்று சுய மரியாதை அற்றவர்களாக அடிமைகளாக வாழ்வதை பார்ப்பது எமக்கு வருத்தத்தை தருகின்றது. மகாத்ம காந்தி கூறுகிறார்:- உலகத்தின் எல்லா மொழி, கலை, கலாச்சாரங்களையும் நான் பெருமையுடன் வரவேற்கிறேன், மதிக்கிறேன். ஆனால் என்னை எனது சொந்த கலாச்சாரத்திலிருந்து பிரிக்க விட மாட்டேன். எமது விடுதலை முழுமையானதாக உண்மையதனதாக இருக்க வேண்டுமாயின், முதலில் நாம் எம்மை மதிக்கவேண்டும எமது அயலவனை மதிக்க வேண்டும். அன்பர்களே தமிழ் மரபு விழாக்கள் ஊடாக எமது தமிழ் அடையாளத்தையிட்டு பெருமை கொள்வோம். அம் மரபு எமது குடும்பங்களிலும் குழுமங்களிலும் வளரவும் வளர்க்கவும் ஆவன செய்வோமாக! பணியாளன் எஸ்.ஜே.இம்மானுவேல் தென் ஆபிரிக்கா 13.01.2013 |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
14 ஜனவரி, 2013
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - எஸ்.ஜே.இம்மானுவேல்
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக