தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின
விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென் ஆபிரிக்கப்
பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்க பயணம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடுகையில்,
தென்னாபிரிக்கா நடுநிலை வகிக்கவில்லை, தனது பட்டறிவுகளையே எம்முடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றது. எங்களோடும் அரசாங்கத்துடனும் தங்களின் அனுபவங்களையே பகிர்ந்து கொள்ளவே தென்னாபிரிக்கா விரும்புகின்றது.
இந்த அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்வதில் எவ்வித மறுப்பும் இல்லை. இதனால் நன்மை மட்டுமே ஏற்படும். இதற்கு எமது சம்மதத்தையே தெரிவித்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக