எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலச்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
21 ஜனவரி, 2013
அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை
அமெரிக்கர்களுக்கு இலங்கைக்கு
வருவதற்கு தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு
நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன்
இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை
செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க
இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி
குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,
இலங்கையை அழிப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.
கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு
எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. அதனையடுத்தும்
குறிப்பாக ஐ.நாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.
அதன்படி இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.
எமக்கும் சீனாவுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது.
எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும்.
அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும்
உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக