சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜனவரி, 2013

இலங்கை நிலைவரம் குறித்து ஜெனிவா அமர்வில் பங்கேற்கும் நாடுகளுக்கு தமிழ் கூட்டமைப்பு விளக்கம்!

 

 ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அங்கத்துவம் பெறும் நாடுகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் இலங்கையின் நிலைவரங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்து வருவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கேசரி வாரவெளியீட்டுக்கு மேலும் தெரிவிக்கையில்,
இறுதியாக இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வில் தெரிவிக்கப்பட்டவற்றில் எதனையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இது பலத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இது தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்கும் நாடுகளுக்கு நாம் தெளிவுபடுத்தி வருகிறோம். மேலும் பல நாடுகளுக்கும் நாம் விளக்கமளிக்கவுள்ளோம்.
மனித உரிமைகள் பேரவை அமர்வில் எம்மால் பங்குகொள்ள முடியாவிடினும் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை ஏலவே நாம் ஆரம்பித்து விட்டோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கை வந்திருந்த போது நாம் பல விடயங்களை அவருக்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அவர்களும் நோரில் பல விடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இவையனைத்தையும் அறிக்கையாக அவர்கள் தயாரித்து நவநீதம்பிள்ளையிடம் வழங்குவதன் மூலம் அதனை அவர் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மார்ச் மாத மனித உரிமைகள் பேரவை அமர்வானது இலங்கையைப் பொறுத்தவரையில் கடுமையானதொன்றாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக