இலங்கையில்
பிரதம நீதியரசர் பதவிக்காக எட்டு பேர் போட்டியிட்டு வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. குற்றவியல் பிரேரணையின் அடிப்படையில் தற்போதைய பிரதம
நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி விலக்குவார்
என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும்
செவ்வாயக்கிழமை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.உச்ச
நீதிமன்ற நீதியரசர்களான சிரானி திலகவர்தன, காமினி அமரதுங்க, கே. ஸ்ரீபவன்,
சலீம் மர்சூக், எஸ்.ஐ.இமாம், சத்யா ஹெட்டிகே, சந்திராக எக்கயாக்க
ஆகியோரும் முன்னாள் சட்ட மா அதிபர்களான சீ.ஆர். டி சில்வா மற்றும் மொஹான்
பீரிஸ் ஆகியோரும் இவ்வாறு பிரதம நீதியரசர் பதவியை பெற்றுக் கொள்வதில்
ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் பெயர்களை
அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை,
தனிப்பட்ட காரணங்களினால் பிரதம நீதியரசர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
என சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக