சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 ஜனவரி, 2013

கோவை கருத்தரங்கில் கலந்து கொண்ட சிங்களவர்களை வெளியேற்ற த.பெ.தி.க போராட்டம்




கோவை கருத்தரங்கில் கலந்து கொண்ட சிங்களவர்களை வெளியேற்ற த.பெ.தி.க போராட்டம்  

கோவை சிறுவாணி காருண்யா பல்கலைகழகத்தில் நீர் மேலான்மை பற்றி கருத்தரங்கம் 10.01.2013 முதல் 13.01.2013 வரை நாசா மற்றும் காருண்யா இணைந்து நடத்திவருகின்றது, இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர் இலங்கையை சேர்ந்த ரஞ்சித் கிரண் லால் மற்றும் சாந்தா ஆகிய 2 சிங்களவர்கள் கலந்து கொண்டனர்.


இதை கண்டித்து இன்று 11.01.2013 வெள்ளி காலை 11 மணிக்கு காருண்யா பல்கலைகழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர் பல்கலைகழகத்திற்கு எதிராக கோசமிட்டனர். இதை தொடர்ந்து காவல்துறை மற்றும் நிர்வாகத்தினர் சிங்களர்களை வெளியேற்றினர் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக