நாடாளுமன்றத்
தெரிவுக்குழு அறிக்கையை ரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு நன்றி
தெரிவிப்பதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பேணிப் பாதுகாக்க
சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினால் அதற்கு முழுமையான
ஆதரவளிக்கப்படும். நாட்டில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை
ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர்
அச்சுறுத்தப்படுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைச்சர் ஒருவரின்
தேவைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸார் இந்த
விசாரணைகளை வேறு திசைக்கு திருப்பியுள்ளனர். ஆளும் கட்சி அமைச்சர்கள்
தேங்காய் ஒன்றுக்கும் கொலை செய்து கொள்ளும் ஓர் யுகம் உருவாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் ஆட்சி விட்டு
விலக வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக