சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஜனவரி, 2013

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியும் வழங்கப்பட மாட்டாது; பொதுநிர்வாக அமைச்சு

 









முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
  அதன்படி இலங்கை சட்டத்தின் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க சட்டத்தில் இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியினால் பணி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை முன்னாள் பிரதம நீதியரசர் இழந்துள்ளதாகக் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணிக்கு அரசினால் குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டு பாராளுமன்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக