சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஜனவரி, 2013

அமெரிக்க உயர்மட்டக் குழு யாழிற்கு விஜயம்

 news
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செயத அமெரிக்க ராஜாங்க அமைச்சின் தெற்காசிய மற்றும் பசுபிக் விவகார பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதிச் செயலாளர்கள் மூவரும் யாழ். ஆயரை அவரது இல்லத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் சந்தித்து  கலந்துரையாடினர்.

இதன்போது யுத்தத்தின் பின்னர்  தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் பலாலி இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இராணுவக் கட்டளைத் தளபதியினைச் சந்தித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் இதன் போது பல்வேறு முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக