சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

31 ஜனவரி, 2013

இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் சாவு மணி; விக்ரமபாகு கருணாரத்ன தெரிவிப்பு

 news
னித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சாவு மணி அடிக்கவிருக்கின்ற நிலையில் அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது  நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த அமைச்சர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு குற்றப்பிரேரணைக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது குற்றப்பிரேரணைக்கு கிடைத்த பரிசாகும். 
 
சர்வதேச நாணயநிதியத்தின் நிதியை பெற்றுக்கொள்வதற்காகவே பிச்சைக்காரனின் புண்ணை போல கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தாமல் வைத்துக்கொண்டே இருக்கின்றது. 
 
அத்துடன் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலான அழுத்தங்களை அமெரிக்காவும் இந்தியாவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்ற நிலையிலேயே அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மேற்குலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்காமல் பொருளாதார நீதியிலான அழுத்தங்களை கொடுக்கும் வகையிலேயே கொஞ்சம் கொஞ்சம் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக