ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சமாளிக்க, மில்லியன் கணக்கான ரூபா செலவில் பொது உறவு முகவர் அமைப்புகளை பணிக்கு அமர்த்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள
தீர்மானத்துக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள
தூதரகங்களுக்கு உதவ, நிபுணர் குழு மற்றும் பொதுஉறவு முகவர் அமைப்புகளை
நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஜெனிவாவில் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கடந்து ஆண்டைப் போலவே இம்முறையும் அமெரிக்காவின் தீர்மானம் இறுக்கமானதாக இருக்கும்.
ஆனால் நாம் அதை எதிர்கொள்வதற்கு அடிப்படை வேலைகளை செய்துள்ளோம்.
கடந்த ஆண்டைப் போலவே நிபுணத்துவம் வாய்ந்த குழு ஜெனிவாவில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும்.
அத்துடன் வெளிநாட்டு பொதுஉறவு முகவர் அமைப்புகள் எமது தூதரகங்களின்
பின்னால் இருந்து சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளும்”
என்றும் சிறிலங்கா வெளிவிவகாரச்செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக