தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியோ அல்லது கொலை செய்தோ
தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்றோம்.
ஆனால், எம்மைத் திட்டமிட்டுப்
பழிவாங்கவும், எம்மீது தாக்குதல் நடத்திக் கொலை செய்யவும் சிங்களப்
பேரினவாதமும், அதனுடன் சேர்ந்தியங்கும் சில குழுக்களும் குறியாகவுள்ளன.
அதேவேளை, எம்மை அடிபணிய வைத்து தமிழ்த்
தேசியத்தை சிதைக்கவும் சிங்களப் பேரினவாதமும், சிலகுழுக்களும் கங்கணம்
கட்டி நிற்கின்றன. எம்மை எவராலும் அடிபணிய வைக்க முடியாது. இது கடந்த கால
வரலாறு.
யுத்தம் நடைபெற்ற 2005 – 2008 ஆண்டு
காலப்பகுதிகளில் தமிழ்க் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை
சிங்களப் பேரினவாதமும், சிலகுழுக்களும் சேர்ந்து சுட்டுக்கொன்றன.
மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் மாமனிதர் ரவிராஜ், வன்னியில் மாமனிதர் சிவநேசன் ஆகியோரை நாம் இழந்தோம்.
ஆனால், தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடிந்ததா? நாம் மேலும் தைரியத்துடனே நிற்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொலைசெய்யும்
முயற்சியில் சிங்களப் பேரினவாதம் குறியாகவுள்ளது என அவர்
சுட்டிக்காடியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக