புதிய பிரதம நீதியரசருக்கு
சட்டத்தரணிகளினால் வழங்கப்படும் மரபு ரீதியான வரவேற்பு நிகழ்வுகள் குறித்த
செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் பிரதம நீதியரசர் பதவிக்கு முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை அரசாங்கம் நியமித்தது.
ஹூல்ப்ஸ்டொப் பிரதேசத்தில் அமைந்துள்ள
உச்ச நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசரை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்று
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு குறித்த செய்திகளை சேகரிப்பதற்கு அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள், நீதவான்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற
கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய பிரதம நீதியரசர்
நியமிக்கப்பட்டால் வரவேற்பு நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என இலங்கை
சட்டத்தரிணகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அந்தத் தீர்மானத்திற்கு அமைய தலைவர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக