அரசாங்கத்தின் சில முக்கிய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணைய தளம் நேற்றைய தினம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
டேவி ஜோன்ஸ் என்ற பெயரில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் இரண்டு தொலைக்காட்சி சேவைகளின் இணைய தளங்களும் இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளன.
வன் ஸ்ரீலங்கா மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய தொலைக்காட்சி சேவைகளின் இணைய தளங்களும் ஹெக் செய்யப்பட்டுள்ளன.
இணைய தளங்களை ஹெக் செய்து. தரவுத்
தளத்தில் ஊடுறுவி மின்னஞ்சல் முகவரிகளையும், கடவுச் சொற்களையும்
பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக