சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜனவரி, 2013

இலங்கை வர விரும்பாத நவிப்பிள்ளை - கவலையுறும் இலங்கை அரசு


news
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பயணம் கேள்விக்குறியாகவே இருப்பது குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் 22வது கூட்டத் தொடருக்கு முன்னதாக, இலங்கை நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளதாக ஏற்கனவே நவநீதம்பிள்ளை அறிவித்திருந்தார்.
 
எனினும் அவர் இலங்கைக்கான பயணத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. 
 
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 
 
“போருக்குப் பின்னரான நிலைமைகளை மதிப்பிடுவதற்கு இலங்கை வருமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனார் அதற்கு இன்னமும் எந்தப் பதிலும் அவரால் வழங்கப்படவில்லை. 
 
ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். 
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, தனது பணியகத்தைச் சேர்ந்த குழுவினரின் முதற்கட்ட பயணம் இடம்பெற்ற பின்னரே தான் இலங்கை வருவதாக நவநீதம்பிள்ளை கூறியிருந்தார். 
 
எனினும் இலங்கை வருவதற்கான தனது விருப்பத்தை நவநீதம்பிள்ளை இன்னமும் எம்மிடம்தெரிவிக்கவில்லை. 
 
அவர் இங்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக