சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜனவரி, 2013

சவாலில் வென்றுவிட்டோம்; ஜனாதிபதி நேற்றுப் பெருமிதம்



news
மது அரசு பல்வேறுபட்ட சவால்களுக்கு தினம் தினம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சவாலில் நேற்று (நேற்று முன்தினம்) வெற்றியைப் பெற்று விட்டோம்.
ஏனைய சவாலிலும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளுவோம். இவ் வாறு பெருமிதத்துடன் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுதந்திர பட்டதாரிகள் மாநாடு, சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
 
இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் அரசியல் யாப்பிற்கு உட்பட்டே எமது அரசு செயற்பட்டது. நீதிமன்றத்தின், சுயாதீனத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
 
இதனால் நீதிமன்றம் என்ற புனித பூமியை பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். நீதிமன்றுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.
 
நீதிமன்ற வளாகத்தை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற போதும் இன்று நீதிமன்ற வளாகம் ஆர்ப்பாட்ட சுற்றுவட்டமாக மாறிவிட்டது.
 
எமது அரசு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சவால் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
எனினும் இலங்கைக்கு எதிராக தற்போதும் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன அவற்றையும் வெற்றி கொள்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக