சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜனவரி, 2013

நளினி - முருகனைப் பார்க்கலாம்; நீங்கியது தட

 பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் - நளினி சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வேலூர் ஜெயிலில் பொலிஸ் அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் நடத்திய அதிரடி சோதனையில், பணம், தொலைபேசி , சிம்கார்டுகள் மற்றும் இலங்கை வரைபடம் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் முருகனிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டமை
தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி முருகன், பெண்கள் சிறையில் இருக்கும் அவரது மனைவி நளினியை சந்திக்க தடை செய்யப்பட்டதுடன் மேலும் முருகனை உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இறுதியாக நடந்த நவம்பர் 24ஆந் திகதி நளினி- முருகன் சந்திப்பு நடைபெற்று இருந்தது.

முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 48 நாட்கள் முடிவடைந்த நிலையில் சிறைதுறை நன்னடத்தை விதியின் கீழ் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து  நளினி - முருகன் சந்திப்பு நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இவர்களது சந்திப்பினையடுத்து சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக