போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்
மன்னாரில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது
என பிரான்ஸ் தூதர் கிரிஷ்டின் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.
வடக்கில்
போரினால் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட
இடங்களுக்கும் யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கும் விஜயம்
செய்த பின்னர் பிரான்ஸ் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயம் வடக்கில் இலங்கை அரசாங்கம்
மேற்கொண்டு வரும் அபிவிருத்திகள் மற்றும் மக்கள் குறிப்பாக மீனவர்களின்
தேவைகளை அறிந்துக்கொள்ளல் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது.
இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களினால் யாழ்ப்பாண மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அதனை தடுக்கும் வழிகள் தேடப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்
மன்னாரில் இனங்களுக்கு இடையில் பதற்ற சூழ்நிலை இருப்பதை தம்மால்
உணரமுடிந்தது என்று ரொபின்சன் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக