வடகொரியாவின்,
ஆயுத நடவடிக்கைகளை கண்காணிக்க, ஜப்பான், உளவு செயற்கைக் கோளை விண்ணில்
செலுத்த உள்ளது. வடகொரியா, சில ஆண்டுகளாக, அண்டை நாடுகளான, தென்கொரியா,
ஜப்பான், தைவான் உள்ளிட்டவற்றை, அணு ஆயுதங்கள், ஏவுகணை தயாரிப்பு என,
அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவின் ஆயுத நடவடிக்கைகளை
கண்காணிக்க, ஜப்பான் நாடு முடிவு செய்தது. இதற்காக, உளவு செயற்கைகோளை
அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த செயற்கை கோள், தானிகாஷிமா விண்வெளி ஆய்வு
மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, வரும், 27ம்தேதி, விண்ணில் செலுத்தப்பட
உள்ளது.
இதில், அதிநவீன ரேடார் சாதனங்களும், கண்காணிப்பு கேமராக்களும்
பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள்
கூறுகையில், "ஜப்பானில், 2011ம் ஆண்டு சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு குறித்த
தகவல்களை சேகரிக்க இந்த செயற்கை கோள் பயன்படும்' என்றனர். ஆனால், அவர்கள்
வடகொரியா குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக